கடை திறப்பு விழாவில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0

விஜய் தொலைகாட்சியில் அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் மிக பிரமாண்டமாக நிறைவடைந்தது. இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா டைட்டிலை வென்று அசத்தினார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். கோப்பையை வென்றது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பேட்டியில் ஈடுபட்டு வந்த இவர், சமீபத்தில் ஓர் கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். தற்போது அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இன்னும் எத்தனை கடைகள் திறக்கப் போறீங்க என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here