தனத்துக்கு செம டோஸ், எந்த சீசனிலும் நடக்காத ஒரு செயலைச் செய்த கமல் – மிரட்டல் ப்ரோமோ!!

0
தனத்துக்கு செம டோஸ், எந்த சீசனிலும் நடக்காத ஒரு செயலைச் செய்த கமல் - மிரட்டல் ப்ரோமோ!!
தனத்துக்கு செம டோஸ், எந்த சீசனிலும் நடக்காத ஒரு செயலைச் செய்த கமல் - மிரட்டல் ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6ல், உலக நாயகன் கமல் கடந்த சீசன்களில் இதுவரை செய்யாத ஒரு ஒரு அதிரடி செயலை செய்து ஹவுஸ் மேட்டுகளை தெறிக்க விட்டுள்ளார்.

வைரலாகும் ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ அதிரடியாக வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், கமல் ஒரு குறும்படம் போடப் போவதாக ஹவுஸ் மேட்டுகளிடம் சொல்கிறார். அதைப் பார்த்ததும் தனலட்சுமி உட்பட மொத்த பேரும் சிரிக்கின்றனர். இதனால் காண்டான கமல், பிக் பாஸ் வீட்டில் போடப்பட்ட ரூல்சை மீறி, தனலட்சுமி கேம் விளையாடியதாக வெளுத்து வாங்குகிறார். உங்களைப் போலவே நானும் சிரித்து, கொண்டே சென்று விட்டால் நான் நல்லவன் கிடையாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனால், ரூல்சை மீறி நீங்கள் விளையாடி ஜெயித்த கேமின் வெற்றியை கேன்சல் செய்வதாகவும், உங்களுடைய நாமினேஷன் பிரீசோன் என்பதை உங்களிடம் இருந்து பறிக்கப் போகிறேன் என்றும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், நேர்மையாக விளையாடி தற்போது நாமினேஷனில் இருக்கும் விக்கிரமனை, நான் சேவ் செய்கிறேன் என அதிரடியாக அறிவித்தார்.

இதைக் கேட்டதும் மொத்த போட்டியாளர்களும், எழுந்து நின்று கை தட்டுகின்றனர். இதுவரை எந்த சீசனிலும் செய்யாத ஒரு அதிரடியை கமல் செய்து காட்டியது, பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here