பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., இப்பிடி பண்ணிடீங்களே லோகேஷ்!!

0
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., இப்பிடி பண்ணிடீங்களே லோகேஷ்!!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., இப்பிடி பண்ணிடீங்களே லோகேஷ்!!

பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மைனா நந்தினி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனவர் தான் மைனா நந்தினி. இவர் தற்போது தமிழில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு, வம்சம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்த விக்ரம், அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. அதன் பிறகு எந்த திரைப்படமும் கமிட்டாகாமல் இருந்து வந்த மைனாவிற்கு ஜாக்பாட் அடித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது விஜய் டிவியை டிஆர்பியில் முதலிடத்தில் வைத்திருந்த ஷோவான பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவர் அந்த வீட்டிற்கு ஒரு வாரம் கழித்தே நுழைந்தார். இருப்பினும் அந்த வீட்டில் நகைச்சுவை, தேவையான இடங்களில் சண்டை என தனித்துவமாக விளையாடி மக்களை அதிகம் என்டேர்டைன்மெண்ட் செய்து வந்தார் மைனா. அதனால் எத்தனை முறை நாமினேட் ஆனாலும் மக்கள் மைனா வீட்டில் இருக்க தகுதி பெற்றவர் என்று அவரை பைனல் வரை கொண்டு சென்றார்கள்.

தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்.., அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ்!!

இறுதிக்கட்டம் வரை சென்ற மைனா லாஸ்ட் எவிக்சனில் வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து வந்த மைனாவை Welcome செய்யும் விதமாக ஒரு பார்ட்டியை மைனா கணவர் லோகேஷ் arrange செய்துள்ளார். அந்த பார்ட்டியில் மகாபா ஆனந்த், ராஜ் மோகன், பிக்பாஸ் மணிகண்டன், சூப்பர் சிங்கர் ரோஷினி அவருடைய கணவர் ஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நன்றி கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here