பிக் பாஸ் வந்தீங்களா? இல்ல ஜாலி ட்ரிப் வந்தீங்களா? ராபர்ட் மாஸ்டரை கண்டபடி வறுத்தெடுத்த ஜனனி!!

0
பிக் பாஸ் வந்தீங்களா? இல்ல ஜாலி ட்ரிப் வந்தீங்களா? ராபர்ட் மாஸ்டரை கண்டபடி வறுத்தெடுத்த ஜனனி!!
பிக் பாஸ் வந்தீங்களா? இல்ல ஜாலி ட்ரிப் வந்தீங்களா? ராபர்ட் மாஸ்டரை கண்டபடி வறுத்தெடுத்த ஜனனி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ அதிரடியாக வெளியாகியுள்ளது.

அதிரடி ப்ரோமோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் நாளுக்கு நாள் எதிர்பாராத, பலவித ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்திற்கான, முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹவுஸ் மேட்டுகள் அனைவருக்கும் BB ரோஸ்ட் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரிடம் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்டு அவரை வறுத்தெடுக்கலாம். இறுதியாக, கேள்விகளால் வறுத்தெடுத்த போட்டியாளரை சக ஹவுஸ் மேட்டுகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்ற டாஸ்கில், ஜனனி ராபர்ட் மாஸ்டரை கேள்வி கேட்கிறார்.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கிய கன்னட பிரபலம்.., அப்ப மாஸ் சீனுக்கு பஞ்சம் இருக்காது!!

அதாவது, எல்லோரையும் டார்லிங், டார்லிங் என கூப்பிடுகிறீர்கள். நிகழ்ச்சிக்கு வந்தீர்களா இல்லை ஜாலி ட்ரிப்புக்கு வந்தீர்களா? எனக் கேள்விகளால் வறுத்தெடுக்கிறார். இதனால் மொத்த போட்டியாளர்களும் திகைத்து போய், பயங்கரமாக சிரிக்கின்றனர். இனி வரும் நாட்களில், இது போன்ற பல சம்பவங்கள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here