அசீமை அலேக்காக தூக்கிய ஹவுஸ் மேட்டுகள்., எல்லாத்துக்கும் காரணம் இதுதான்! பரபரப்பு ப்ரோமோ!!

0
அசீமை அலேக்காக தூக்கிய ஹவுஸ் மேட்டுகள்., எல்லாத்துக்கும் காரணம் இதுதான்! பரபரப்பு ப்ரோமோ!!
அசீமை அலேக்காக தூக்கிய ஹவுஸ் மேட்டுகள்., எல்லாத்துக்கும் காரணம் இதுதான்! பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அசீமை அலேக்காக தூக்குவது போன்ற ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

வைரல் ப்ரோமோ :

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி எதிர்பாராத பலவித திருப்பங்களுடன், பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் ஸ்டால் டாஸ்கில் போட்டியாளர்களிடையே பிரச்சனை, வாக்குவாதம் என உச்சகட்ட மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய வாரத்தில், பிக் பாஸ் வீடு பழைய ராஜா காலத்து அரண்மனை போல் மாறப் போவதாக ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் போட்டியாளர்கள் அனைவரும் பல குழுக்களாக பிரிந்து ராஜா, ராணி, மந்திரி என அரண்மனை காலத்து வாழ்வை வாழப் போகிறார்கள். இதற்காக அவர்களை, அவர்களே தரம் பிரித்துக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஓடி வந்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.

பிக் பாஸ் வந்தீங்களா? இல்ல ஜாலி ட்ரிப் வந்தீங்களா? ராபர்ட் மாஸ்டரை கண்டபடி வறுத்தெடுத்த ஜனனி!!

அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில், ஹவுஸ் மேட்டுகள் அனைவரும் மகிழ்ச்சியாக சேர்ந்து அசீமை தூக்கி கொண்டாடுகின்றனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here