பிக்பாஸ் 6: தேதி, நேரம் குறிச்சாச்சு பா.,எல்லாம் ரெடி ஆகிட்டீங்களா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!!

0
பிக்பாஸ் 6: தேதி, நேரம் குறிச்சாச்சு பா, எல்லாம் ரெடி ஆகிட்டீங்களா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கும் தேதி மற்றும் நேரத்தை சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கும் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 குறித்த அப்டேட் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இதற்கு முந்தைய சீசன்களை போலவே, இந்த சீசனையும் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான ப்ரோமோ வெளியாகியும், இது எந்த நாளில், எப்போது தொடங்கும் என்று உறுதியான அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பழச  நெனச்சு  என்ன பிரயோஜனம்.., கணவரின்  இழப்பில் இருந்து மீண்டு  வந்த  மீனா.., அவரே வெளியிட்ட பதிவு!!

அதுமட்டுமில்லாமல், இந்த சீசன் முதல் முறையாக disney+ hotstar தளத்திலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளப் உள்ளவர்கள் யார் யார் என்ற பட்டியல், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்அன்றைய நாளில் தான் பார்வையாளர்களுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here