மயங்கி விழுந்த அசீம்., உடனே வீட்டை விட்டு அனுப்ப பிக் பாஸுக்கு கோரிக்கை! ரசிகர்கள் ஷாக்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், மிகவும் மனமுடைந்து காணப்படும் அசீம் தன்னை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுமாறு, பிக் பாஸிடம் கேட்டுள்ளார்.

வெளியேறும் அசீம் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்று வருபவர் அசிம். ஆரம்பத்தில் இவர் விளையாடும் கேமும், முன்கோபமும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. ஆனால் தற்போது, தனம் மற்றும் அசீம் இல்லை என்றால் பிக் பாஸ் போர் அடிக்கும் என்று ரிவ்யூ கொடுத்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படிப் பெயர் வாங்கி இருந்த அசீம், இந்த வார தொடக்கத்தில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். நேற்று பாத்ரூமில் சென்று கதறி அழுத அவருக்கு, ADK ஆறுதல் கூறினார். இன்று கதிரவனிடம் உட்கார்ந்து பேசி விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென அசீம் மயங்கி சரிந்தார். இவரை ஹவுஸ் மேட்கள் தூக்கிக்கொண்டு மெடிக்கல் ரூமிற்கு ஓடினர்.

ரட்சித்தாவ நான் இந்த மாதிரி தான் நினைத்தேன்.., எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.., ராபர்ட் மாஸ்டர் விளக்கம்!!

இதனைத் தொடர்ந்து தன்னை எந்தவித கேள்வியும் கேட்காமல் உடனே வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு பிக் பாஸுக்கு அசீம் கோரிக்கை விடுத்துள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இனியும் இந்த கேம் விளையாட விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here