ஜனனி செயலால் கதறி அழுத ADK., ஆதங்கத்தில் வெளிவந்த உண்மைகள் – பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ!!

0
ஜனனி செயலால் கதறி அழுத ADK., ஆதங்கத்தில் வெளிவந்த உண்மைகள் - பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஜனனி செய்த செயலால் ஏடிகே கதறி அழும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவாக வெளிவந்துள்ளது.

அழுத ஏடிகே :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட கலவரம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலைக்கு ரெடியாகினர். சக ஹவுஸ் மேட்டுகள் இவர்களை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், இருவரும் கடைசி வரை சமாதானம் ஆகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், லிவிங் ரூம் ஏரியாவில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் வீட்டில் முகமூடி அணிந்து, வலம் வரும் நபர் யார்? என சொல்ல வேண்டும் என்பது நிபந்தனை. இதில் ஜனனி, ஏ டி கே வை தேர்ந்தெடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏடிகே ஜனனியிடம் சென்று, என்னை பார்த்தா அப்படியா தெரியுது? என கேட்டார்.

அதுமட்டுமில்லாமல், இந்த வீட்டில் யார் மேலேயும் வைக்காத ஒரு பாசம், ஒரு அண்ணனாக உன் மேல் வைத்தேன். நீ அந்த பாசத்தை கொச்சைப் படுத்தி விட்டாய் எனக் கூறி கதறி அழுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி காண்போரை கதிகலங்கச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here