பிக் பாஸ் 5 இல் களமிறங்கும் அஜித் பட நடிகை – சண்டைக்கு ஆள் தேடுறாங்களோ??

0
பிக் பாஸ் 5 இல் களமிறங்கும் அஜித் பட நடிகை - சண்டைக்கு ஆள் தேடுறாங்களோ??
பிக் பாஸ் 5 இல் களமிறங்கும் அஜித் பட நடிகை - சண்டைக்கு ஆள் தேடுறாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஜித் பட நடிகை கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை கேட்டு பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் 5:

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் வெளியிட போவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2 ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. முதல் ப்ரோமோவை பார்த்தே ரசிகர்கள் ஏக சந்தோசம் அடைந்தனர்.

போன சீசனை போல விறுவிறுப்பாக செல்லுமா? அல்லது இரண்டாவது சீசனை போல பிளாப் தானா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தான் அதில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் 5 இல் களமிறங்கும் அஜித் பட நடிகை - சண்டைக்கு ஆள் தேடுறாங்களோ??
பிக் பாஸ் 5 இல் களமிறங்கும் அஜித் பட நடிகை – சண்டைக்கு ஆள் தேடுறாங்களோ??

இந்த சீசன் ஆரம்பிக்கும் வரையிலும் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் ஜி.பி.முத்து, மிலா, ஈஸ்வர் போன்றோர் கலந்துகொள்ள போவதாக நாள் தோறும் தகவல் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தான் அஜித் படமான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here