
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீமுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தனலட்சுமி, டாஸ்க்கில் நடந்த முக்கிய உண்மைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தனம் ஓபன்டாக் :
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னரான அசீம் தனியார் youtube சேனலின் பேட்டி ஒன்றில் தனலட்சுமியுடன் சமீபத்தில் பங்கேற்றார். அப்போது பொம்மை டாஸ்க்கில், தனத்திடம் அசீம் நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது அசீம், உங்களை, கையை வைத்து தள்ளி விட்டு Abuse செய்தாரா? எனக் கேட்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு பதில் அளித்த தனம், அசீம் அண்ணா செய்ததை Abuse என்று சொன்னால், Tunnel டாஸ்க்கில் விக்ரமன் என் காலை பிடித்து மடக்கி உள்ளே போக விடாமல் தடுத்தார். அப்போது அதற்குப் பெயர் என்ன சொல்வீர்கள், என அந்தர் பல்டி அடித்தார். அசீம் என்னை தள்ளி விட்டதால், இதை எப்படி அவர் செய்யலாம் என்று தான் கோபப்பட்டேனே தவிர, என்னிடத்தில் தவறாக நடந்து கொண்டார் என குறிப்பிடவே இல்லை என அடித்து பேசினார்.
பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?
இதைப் பார்த்த ரசிகர்கள், எப்படிங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நிகழ்ச்சியில் இருந்த போது, அவர் என்னை அந்த இடத்தில் கையை வைத்து தள்ளிவிட்டார் என சொன்னீங்க, இப்ப மாற்றி மாற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது என இவரை கலாய்த்து வருகின்றனர்.