பிக்பாஸ் 6 வரப்போவது கன்பார்ம் – ஆனால், கமல் ஏன் அப்படி சொன்னாரு? ஒரே வார்த்தையால் உச்சகட்ட குழப்பம்!!

0
பிக்பாஸ் 6 வரப்போவது கன்பார்ம் - ஆனால், கமல் ஏன் அப்படி சொன்னாரு? ஒரே வார்த்தையால் உச்சகட்ட குழப்பம்!!

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6, விரைவில் துவங்க உள்ளதற்கான அறிவிப்பு டீசருடன் வெளியாகியுள்ளது. இதில் கமல் முக்கியமான ஒரு வார்த்தையை சொல்லி ரசிகர்களை குழம்பியுள்ளார்.

ஒரே வார்த்தை:

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்து சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில், 6வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான டீசர், சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டீசரில் கலந்து கொண்ட கமல் வேட்டைக்கு ரெடியா? எனக் கேள்வி கேட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் 6 வரப்போவது உறுதி. ஆனால், கமல் ஏன் அப்படி கேட்கிறார் என, கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தில்,  கமலின் சம்பளம் எகிறியுள்ளதால், இந்த நிகழ்ச்சிக்கு கமல் எவ்வளவு எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்  என்ற ஆவல் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. ஆனால் இதையெல்லாம் பார்த்த அவரது ரசிகர்கள், நாங்கள் இன்னும் உங்களை வெள்ளித்திரையில் பார்க்க விரும்புகிறோம். அதனால் இதை, விட்டுவிட்டு நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here