பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் வாய்ப்பு கொடுக்காமல் 2 முறை துரத்தப்பட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர் – பகீர் பதிவு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் பெற்ற ராஜு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க 2 முறை ஆடிசன் சென்ற போதும், வாய்ப்பு கொடுக்காமல் தட்டிக் கழிக்கப்பட்ட செய்தியை தற்போது பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் ராஜூ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த குடும்பங்கள் கொண்டாடும் தொடராக, இந்த சீரியல் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீரியல் ஆரம்பிக்கும் போது, நடிகர்களுக்காக நடந்த ஆடிஷன் நிகழ்ச்சியில் , பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் டைட்டில் வின்னர் ராஜூ கலந்து கொண்டார்.

முதலில் கதிர் பாத்திரத்திற்கான ஆடிஷனிலும் , அடுத்ததாக ஜீவா பாத்திரத்திற்கான ஆடிசனிலும் கலந்து கொண்டார். ஆனால் இவருக்கு, இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பும்  கிடைக்கவில்லை. தற்போது இந்த சுவாரஸ்ய தகவலை, ராஜ் வீட்ல பார்ட்டி எனும்  ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவரே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here