பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பவர்கள் லிஸ்ட் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த போட்டிகள் வரும் ஜூன் மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக சற்று தாமதமாக தான் நிகழ்ச்சி துவங்கியது. அதே போல் இந்த வருடம் சற்று முன்னதாகவே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியினை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவார்ட் நிகழ்ச்சில இதுக்காகவா அழுதீங்க அஷ்வின்?? நீ நல்லா இருக்கனும் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

காரணம், நடிகர் கமல் ஹாசன் அரசியலில் மிகவும் பிசியாக இருப்பதால் இந்த முடிவு என்று தகவல் கூறப்பட்டது. அதே போல் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் பிக் பாஸ் குழு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மக்களை கவரும் வண்ணம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பங்கேற்ற நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் “குக் வித் கோமாளி” பிரபலங்கள் அஸ்வின், சுனிதா, கனி, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். திரைபிரபலங்களான ராதாரவி, சித்தார்த் ஆகியோரும், நடிகைகளான சோனா, லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், ராதா, பூனம் பஜ்வா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here