பிக் பாஸ் சீசன் 6-இல் கலந்துகொள்ள உள்ள முக்கிய போட்டியாளர் – வனிதாவையே மிஞ்சிடுவார் போலயே!

0

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள முதல் போட்டியாளர் யார் என்பது குறித்தான தகவல் சமூக வலை பக்கங்களில் லீக்காகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது வரை பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்துவிட்டது. 5 சீசன்களை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இதனையடுத்து எப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அதன்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவியான மோனிகா ரிச்சர்டு தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் லீக்காகியுள்ளது.

கடந்த ஆண்டு தான் டி.இமான் மோனிகாவை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொண்டார். அவ்வப்போது டி.இமானை குறித்து பகிரங்கமாக பேசி சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் மோனிகா. கண்டிப்பாக மோனிகா ரிச்சர்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. வேறு எந்தெந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here