நான்தான் முதல் இளைய தளபதி – பிக்பாஸ் சரவணன் புதிய சர்ச்சை..!

0

நான்தான் முதல் இளைய தளபதி என்று கூறிவருகிறார் பிக் பாஸ் சரவணன்.தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது வழக்கம் அதும் யாருக்கும் வைக்காத கொடுக்காத பட்டமாக தான் இருக்கும்.ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் தளபதி என்று  அழைக்கப்படும் விஜய்’க்கு கிடைத்த இந்த ‘இளைய தளபதி ‘ என்ற பட்டம் முதன் முதலில் நம்ம சித்தப்பு, பிக் பாஸ் சரவணனுக்கு தான் இருந்ததாம்.

நான்தான் இளைய தளபதி பிக் பாஸ் சரவணன்

சேலத்தை சேர்ந்த சரவணன் வைதேகி வந்தாச்சு என்னும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் வளம் வர தொடர்ந்தார்,அனால் ஒரு சில படத்திற்கு பின் அவருக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.சேலத்தில் சரவணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தி.மு.க-வுல வீரபாண்டி ஆறுமுகம். தளபதி மாதிரி சுத்திக்கிட்டிருந்த தம்பி சரவணன் சினிமாவுக்குப் போயிருக்கார். சினிமாவுக்குன்னு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் வேண்டாமா? `தளபதி’ன்னே பட்டம் தந்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, சென்னையில பட்டம் ஒரு தளபதி (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டாராம்) இருக்குறதால, இவருக்கு `இளைய தளபதி’ன்னு கொடுத்துடலாம்’னு முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான்  என்று கூறியுள்ளார் சரவணன்.

மேலும், பேசிய அவர், அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான் நடித்து வெளியான படம் `நல்லதே நடக்கும்.’ அந்த படம் டைரக்டர் கே.சங்கர் சாருக்கு அது 100-வது டைரக்டர் முதன்முதல்ல டைட்டில் கார்டுல `இளைய தளபதி’ சரவணன்னு போட்டாங்க. அதன் பின்னர் நான் நடித்த படங்களில் ‘இளைய தளபதி’னு போட ஆரம்பித்தேன். நல்ல போய்க்கொண்டு இருந்த எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.பட வாய்ப்புகள் குறைஞ்சதால இந்தப் பட்டத்தை நானும் அப்படியே மறந்துட்டேன். இந்தச் சூழல்லதான் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடித்த ஒரு படத்துல அவருடைய பெயருக்கு நடித்த `இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ஷாக். உடனே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம். அதற்கு அவர், `உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார். என்ன நினைச்சு அவர் சொன்னாரோ, எனக்கும் அதுக்குப் பிறகு படங்கள் அமையலை. அதனால நானும் அப்படியே ஒதுங்கிட்டேன்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here