பிக் பாஸில் இருந்து வெளிவரும் முன்னே பட வாய்ப்பை அள்ளிய போட்டியாளர் – யாருன்னு பாருங்க!!

0
Raju-Jeyamohan

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே நடிகர் ராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 3 படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராஜூ ஜெயமோகன்:

விஜய் டிவியில் பிரபலமான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். அடுத்தாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்லூரி சாலை’, ‘ஆண்டாள் அழகர்’ மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ ஆகிய தொடரில் நடித்தார். மேலும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது போட்டியாளராக நுழைந்து வெற்றியாளர் ஆகும் நிலையில் உள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்துள்ள நிலையில் இதுபோன்ற வாய்ப்பு யாருக்கும் வந்தது இல்லை என்றே கூறலாம். ராஜு பிக் பாஸுக்கு முன்னரே நடிகர் கவின் நடித்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் கவினின் நண்பனாக நடித்து இருப்பார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளி வருவதற்கு முன்பே நடிகர் ராஜு ஜெயமோகனுக்கு நடிக்க பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் நடிகர் ராஜு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளி வந்த வந்தவுடன் இந்த படங்கள் பற்றி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பில் அவரின் ரசிகர்கள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here