எங்க வீட்டு குத்து விளக்கு…நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து…!பட்டு புடவையில் தேவதையாக மாறிய பிக் பாஸ் ஜூலி!!!

0

விதவிதமான பல மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி  ரசிகர்களை கிக்கேத்தி  வந்தார் பிக் பாஸ் ஜூலி. இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியான புகைப்படத்தில் அழகான பட்டு புடவையில் ஒரு குத்து விளக்குடன் மேலோக தேவதை போல காட்சி தருகிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள்  ஜூலியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தி மக்கள் மனதில் ஒரு வீர மங்கையாக அமர்ந்தவர் ஜூலி அவர்கள். இதன் மூலம் அவருக்கு  கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த ஷோவில் முதலில் அமைதியாக எதையும்  பொறுமையாக எதிர்கொண்டு மக்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் நன்மதிப்பை சம்பாதித்தார். அதன் பின்பு அவரின் சில தேவையற்ற செய்கைகளால் அந்த மதிப்பை இழந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல வேதனைகளை   எதிர்கொண்டார். இருப்பினும் அனைத்தையும்  தனது மன உறுதி கொண்டு தாங்கினார். தற்போது அவர் மீண்டும் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள்  என்ற நிகழ்ச்சி மூலம் திரை முன் தோன்றுள்ளார். மேலும்  அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மார்டன் உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு சில நாட்களாக புடவைக்கு மாறி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அழகான பட்டு புடவையில் ஒரு குத்து விளக்கு உடன் ஒரு தேவதையாக தோன்றி ரசிகர்களை திகைக்க வைத்து  உள்ளார். மேலும் ரசிகர்கள் அவரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலைகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here