நல்லா பண்றீங்க… மாஸ் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் பாலா!!!

0

பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு ரன்னர் ஆக தேர்வுசெய்யப்பட்டவர் பாலாஜி முருகதாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உடல் பயிற்சி செய்யும் மாஸான வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் நான்காவது சீசனில் 100 நாட்களைக் கடந்து இறுதிப் போட்டியாளர் பட்டியலில் இடம் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். பல்வேறு அழகு போட்டிகளில் கலந்துகொண்டு தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார் பாலா. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷிவானியுடனான நெருக்கம், ஆரியுடன் சண்டை என பல சர்ச்சைகளில் பாலாவின் பெயர் அடிப்பட்டது. இருந்தாலும் நிகழ்ச்சியின் இறுதிவரை பயணித்து ரன்னர்  ஆக தேர்வு செய்யப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் மட்டுமில்லாமல்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிரவைத்த இவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாலா அடிக்கடி தன் போடோக்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கம். இவர் தற்போது இன்ஸ்டாவில் தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவிட்டுள்ளார். இவரது ரசிகர்கள் அதற்கு லைக்சையும், கமெண்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here