‘எப்பிடி இருந்த நான்…இப்பிடி ஆயிட்டேன்’-தனது புகைப்படத்திற்கு மதிப்பெண் கேட்ட பிக் பாஸ் பாலா!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் பாலா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதை தொடர்ந்து தன்னுடைய தற்போதைய புகைப்படங்கள் வருவது போல  அமைத்து தனது பருவளர்ச்சியை ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதோடு 1 லிருந்து 10 வரை மதிப்பெண் அளிக்குமாறு கேட்டு உள்ளார்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் பாலா. அந்த துறையில் பல சாதனைகள் படைத்து தனக்கென ஒரு இடத்தை பெற்று நிலைத்து நின்றார். அதன் பின்பு  பல விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து உள்ளார். பின்னர் பிக் பாஸ் சீசன்-4ல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் முதலில் தனக்கென ஒரு விதி, தனக்கென ஒரு பாதை என மிக திறமையாக  விளையாடிகொண்டிருந்தார். மேலும் அங்கு  பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

இருப்பினும் அந்த வீட்டில் ஒரு காதல் மன்னனாக, பயில்வானாக மற்றும் எதற்கும் அசையாத ஒரு தைரியசாலியாகவும் வலம் வந்தார். மேலும் இவரின் கட்டழகைப் பார்த்து பல ரசிகர், ரசிகைகள் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனது சிறு வயது போட்டோ, அதை தொடர்ந்து தான் கட்டழகை உடன் இருக்கும் ஒரு புகைப்படம், அதன் பின் தற்போதைய புகைப்படம் என ஒரு கோர்வையாக அமைத்து தனது பருவளர்ச்சி மாறுபாட்டை ஒரு வீடியோவாக வெளியிட்டு அதற்கு 1 முதல் 10 வரை மதிப்பெண்கள் வழங்குமாறு ரசிகர்களை நோக்கி கேட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here