இன்னும் திருந்தாமல் விஜய்&சூர்யாவை குறை கூறும் மீரா – காண்டாகிய ரசிகர்கள்!!

0
meera mithun
meera mithun

பிக் பாஸ் 3 முலமாக பிரபலம் அடைந்த நடிகை மீரா மிதுனிருக்கு அவரது அனைத்து விதமான பேச்சுகளுக்கும் காரணம் தன்னுடன் இருந்த அப்சரா என்ற திருநங்கை தான் என்று ஒருவர் கூறியதற்கு காரசாரமான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மீரா மிதுன்

மாடலிங் துறையில் இருந்து தான் பல நடிகைகள் திரைத்துறைக்கு வருகின்றனர். அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து நடிகையாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான், நடிகை மீரா மிதுன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் நடுவில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் அவர் செய்யாத அலும்பல்களே கிடையாது.

அந்த வீட்டில் பல பிரச்சனைகளுக்கு இவர் தான் காரணமாகவே இருந்தார். அதே போல் இயக்குனர் சேரன் தன்னை “பேட்” டச் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அவரை பலரும் வெறுத்தனர். மீரா மிதுன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தினை பெற்றார். அதன் பிறகு அந்த பட்டத்தினை இவர் தந்திரமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த பட்டத்தினை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேலும் 39,726 பேருக்கு கொரோனா – பீதியில் மக்கள்!!

இப்படியாக இருக்க இவர் கடந்த ஆண்டு முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யாவை பற்றி தப்பாக அனைவரிடமும் கூறினார். அவர்கள் அனைவரும் தன்னை தான் பாலோ செய்வதாகவும் தனது தனித்துவத்தை திருடுவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவர் மீது கோபம் அடைந்தனர். இப்படியாக இருக்க இவர் தொடர்ச்சியாக பல பிரபலங்களை குற்றம் சாட்டி வந்தார். தொடர்ச்சியாக இவர் இப்படி செய்ததால் அவரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், இதற்கு மத்தியிலும் ஒரு ரசிகர் இவருக்கு புத்திமதி சொல்வது போல் “நீங்கள் பிரபலங்களை குற்றம் சொல்வதற்கு காரணம் உங்களுடன் இருக்கும் அப்சரா என்ற திருநங்கை தான் என்று கூறியுள்ளார். அதற்கு மீரா மிதுன் “உங்களது அறிவுரைக்கு நன்றி. உண்மையினை யாராலும் மறைக்க முடியாது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இவரது பதிலை கேட்டு நெட்டிசன்கள் இவர் இன்னும் திருந்தவில்லை என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here