டிக் டாக் தடை திரும்ப பெறப்பட்டது… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

அமெரிக்காவில், டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை திரும்ப பெற்றார் அதிபர் ஜோ பைடன்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீனாவின் டிக்-டாக், வீ சாட் உள்ளிட்ட செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.

பின்னர்  சென்ற ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதிவியேற்றார். அவர் தலைமையிலான அமெரிக்க அரசு டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் திடிரென்று டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது திரும்ப பெற்றுள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதும் அமெரிக்காவில், டிக்டாக், விசாட் செயலிகளுக்கு தடை விதிக்க முயற்சிக்கும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் கைவிடப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here