இருந்தாலும் உனக்கு தில்லு அதிகம் தான் பா – டாப் பாகிஸ்தான் பேட்ஸ்மேனை வீழ்த்திய இந்திய பவுலர்!

0
இருந்தாலும் தில்லு அதிகம் தான் பா - பாகிஸ்தான் பேட்ஸ்மேனை வீழ்த்திய இந்திய பவுலர்!
இருந்தாலும் தில்லு அதிகம் தான் பா - பாகிஸ்தான் பேட்ஸ்மேனை வீழ்த்திய இந்திய பவுலர்!

இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை தனது அபார பந்து வீச்சால் நாலாபுறமும் சிதறடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

வேக பந்து வீச்சாளர்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். ஆனாலும் இதில் ஒரு வீரர் மட்டும் தனது அபார பந்து வீச்சால் அடுத்த போட்டிக்கான இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதாவது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன புவனேஷ் குமார் பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் கேப்டனான பாபர் அசாமை அதிக ரன்கள் குவிக்க விடாமல் 10 ரன்களில் ஆட்டமிழக்க வைத்து பெவிலியனுக்கு வழி அனுப்பி வைத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவரது பந்துவீச்சை பார்த்து தற்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் சம்பித்து போய் உள்ளனர். மேலும் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மிக்கி ஆர்தர், புவனேஷ் குமார் தனது பந்து வீச்சின் மூலம் அனைவரையும் மிரள வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவனேஷ்வர் குமார் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். எனவே இவருக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் புவனேஷ் குமார் சிறப்பாக விளையாடியதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. அந்த மைதானத்தில் வேக பந்து வீச்சாளர்கள் பல சாதனைகள் புரிய வாய்ப்புள்ளது. இதனால் பல முன்னாள் வீரர்களின் ரெக்கார்டை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றுதான் தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான அடுத்த போட்டியில் மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here