கர்ப்பத்தை வைத்து மிரட்ட திட்டம் தீட்டும் வெண்பா.., சிக்குவாரா பாரதி.., பல ட்விஸ்ட்களுடன் நகரும் சீரியல்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில வாரங்களாக, விறுவிறுப்பான எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பா, பாரதிக்கு ட்விஸ்ட் ஒன்றை கொடுக்க பிளான் போட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தீவிரவாதிகளால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து பாரதி குடும்பத்தினர் அனைவரும் தப்பித்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் இன்றைய எபிசோடில், வெண்பாவிடம், சாந்தி கர்ப்பத்தை கலைத்து விடலாம். அதற்கான மாத்திரையை நான் வாங்கிட்டு வரேன் என சொல்கிறார். அதற்கு வெண்பா, மாத்திரை வேணாம் இந்த கர்ப்பத்தை நான் கலைக்க வில்லை என்று சொல்ல, அதிர்ச்சி அடையும் சாந்தி. இதை காரணமாக வைத்தே உங்களை ரோஹித் கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்கிறார் சாந்தி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு பதிலளித்த வெண்பா, கர்ப்பத்தை கலைக்காமல் இதற்கு காரணம் பாரதி தான் என்று சொல்லி அவனை திருமணம் செய்ய போகிறேன். பின்னர் வெண்பா “வாழ்த்துக்கள்” என பாரதிக்கு மெசேஜ் அனுப்ப இதை பார்த்து பாரதி வெண்பாவிற்கு போன் போட்டு நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பிப்பது வந்திருக்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு போன் பண்ணி கூட கேக்கல என்று கேட்கிறார். இதற்கு வெண்பா, உன்ன மாதிரி தான் நானும் இறப்பு வரை போயிட்டு திரும்பி வந்து இருக்கேன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவை காதலிக்கும் பாலா?? வெளிவந்த உண்மை சம்பவம்!!

நான் என்ன பண்றதுனு தெரியல, யார் கிட்டயாவது சொல்லி அழணும் போல இருக்கு என சொல்ல பாரதி என்ன விஷயம் என கேட்க நீ அவார்டு பங்ஷனுக்கு போயிட்டு வழக்கமா மீட் பண்ற இடத்துக்கு வந்திரு என சொல்கிறார். அப்புறம் கண்ணம்மா உன்னை காப்பாத்திருக்கா, இதை வைச்சு உங்க வீட்ல உன்னையும் அவளையும் சேர்த்து வச்சிருவாங்க என வெண்பா சொல்ல, அதுக்கு பாரதி, கண்ணம்மா எனக்கு பெரிய துரோகத்த செஞ்சிருக்க அவளை நான் ஏத்துக்க மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு அவார்ட் பங்க்ஷனில் பாரதி மற்றும் கண்ணம்மாவை பாராட்டி விருது வழங்குகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here