என்ன நடந்துச்சு தெரியுமா?? பாரதி கண்ணம்மா பரீனா கொடுத்த ஓபன் டாக்.., ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த பரீனா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அழகு சீரியலில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வந்தார். அங்கிருந்து விஜய் டிவிக்கு வந்தவர் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்தார். கதைக்களத்தை வைத்து பார்க்கையில் ரசிகர்கள் பரீனாவை கழுவி ஊற்றினாலும் உருவத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை ஈர்த்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அவரது கண்ணக்குழி சிரிப்பாலும், வட்ட முகத்துக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனாவுக்கு தற்போது ஆண் குழந்தையும் இருக்கிறது. டெலிவரிக்கு பிறகு பரீனா மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தாலும் அவர் இருக்கிறாரா? என்பதே டவுட்டாக உள்ளது.

அந்த அளவுக்கு சீரியலில் வெண்பாவின் கேரக்டர் டம்மியாக்க பட்டுள்ளது. இவர் சீரியல்ல மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு அதன் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.  அந்த வகையில் தற்போது ராஜு வீட்டுல பார்ட்டிக்கு சென்றுள்ளது போன்றும், அங்கு என்ன நடந்துச்சு தெரியுமா? அப்படிங்குற கேள்வியையும் கேட்டுள்ளார். அதனால் ரசிகர்களும் என்ன நடந்திருக்கும்னு யோசிச்சு குழம்பி உள்ளார்கள். இனி வரும் எபிசோடுகளை பார்த்தால் மட்டுமே என்ன நடந்தது என தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here