பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – பிரதமர் மோடி தமிழில் சூட்டிய புகழாரம்!!

0

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் அவரை பற்றி ட்வீட் செய்து பெருமை படுத்தியுள்ளார்.

நூற்றாண்டில் பாரதி:

தூங்கி கிடந்த மக்களின் நெஞ்சில் தமிழ் கவிதைகளால் விடுதலை கனல் மூட்டியவர் மகாகவி பாரதியார். “முண்டாசு கவிஞன், முறுக்கு மீசை கவிஞர், நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா, செந்தமிழ் தேனீ” என்ற பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் பாரதி மறைந்து இன்றோடு நூறாண்டு காலம் கடந்து விட்டது.  விடுதலை மட்டுமல்லாமல், பெண் கல்வி, மூடநம்பிக்கை, இயற்கை என பலவித கோணங்களில் கவி பாடி வந்தவர் பாரதி என்பது மறுக்க முடியாத உண்மை.

இவரது தமிழ் கவிதையான “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனும் பாடல் இன்று வரை தமிழனின் பெருமையை தரணி அறிய செய்து  கொண்டிருக்கிறது.  இந்த பாடல் மூலம் தமிழில் எத்தனை இனிமைகள் நிறைந்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது என்பது இக்கால கவிஞர்கள் பாராட்டு பத்திரமாக உள்ளது.  இத்தகு சிறப்பு கொண்ட பாரதியின் நூற்றாண்டு நினைவு தினமான இன்று பலரும் அவருக்கு வார்த்தைகளால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பிடத் தகுந்த வகையில், நமது நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி, தமிழில் பாரதியார் பற்றி ட்வீட் செய்து பெருமை படுத்தியுள்ளார்.  அவர் கூறியதாவது, பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளான இன்று, சமூக நீதி, பெண்களுக்கு உரிமை அளித்தல், அவரது பெரும் கவித்துவம், பன்மொழித் தன்மை என அனைத்தையும் நினைவு கூறுகிறேன்.  இந்த நூற்றாண்டு நினைவு அஞ்சலியை பாரதிக்கு சமர்ப்பிகிறேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here