பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடக்கம்!!

0
bharathiraja
bharathiraja

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆன பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பம் ஆக உள்ளது. நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.எனது தலைமையில் புதிய தயாரிப்பாளர் அமைப்பு உருவாவது பற்றி வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. தேர்தல் வேலைகள் நடைபெறும்போது சில பல பிரச்சனைகளால் தள்ளிப்போனது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது. இது குறித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை சனிக்கிழமை இரவு வெளியிட்டிருந்தார். மேலும் அதில், “நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை, அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது என தெரிவித்தார்.தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், பொதுச்செயலாளராக டி.சிவா, பொருளாளராக தியாகராஜன், இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

நண்பர்களுடன் வீடியோகால் பேசும் நடிகர் விஜய் – வைரல் போட்டோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here