பாரதிராஜா மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் தவிக்கிறாரா? அவரது மகன் மனோஜ் கொடுத்த அதிரடி பேட்டி!!

0
பாரதிராஜா மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் தவிக்கிறாரா? அவரது மகன் மனோஜ் கொடுத்த அதிரடி பேட்டி!!

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இது பற்றி அவரது மகன் மனோஜ் பாரதிராஜா முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

மகன் விளக்கம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரை பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் பாரதிராஜா, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தத்தளித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியானது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதுகுறித்து பேசிய அவரது மகன் மனோஜ் பாரதிராஜா, இந்த மாதிரி எல்லாம் யார் சொன்னது? சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். தேவையில்லாத  வதந்திகளை பரப்ப வேண்டாம் என எச்சரித்தார். அது மட்டும் இல்லாமல், அவர் முழு குணமடைந்து விட்டதால் விரைவில் உங்களை சந்திப்பார் என தெரிவித்தார்.

இது குறித்து, பேசிய மருத்துவர்கள்  நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பாரதிராஜாவின் உடல்நிலை தேறி விட்டதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here