தன் அப்பாவை பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் லட்சுமி…!பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி இருக்கும் கண்ணம்மா!!!

0

பல்வேறு வித பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் விஜய் டிவியில் கடந்த ஒரு சில வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய கதைக்களமாக தன் அப்பாவை பற்றி சரமாரியாக கேள்விகளை கேட்கிறார் லட்சுமி. அதற்கு பதில் கூற முடியாமல் அழுகிறார் கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி, தான் பெற்றெடுத்த குழந்தை தான் என்ற உண்மையை பாரதியிடம் போட்டு உடைக்கிறார் கண்ணம்மா. அதன் பிறகு மிகுந்த ஆவேசத்தில் கண்ணம்மா மற்றும் தன் குடும்பத்தை கண்டமேனிக்கு திட்டுகிறார் பாரதி. இதனையடுத்து இன்று, தன்னுடைய நம்பிக்கையை அழித்துவிட்டதாக சௌந்தர்யா, வேணு மற்றும் அஞ்சலியிடம் கண்கலங்கி வருத்தத்துடன் கூறுகிறார் பாரதி.

கண்ணம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட இருந்து விலகி போறீங்க சௌந்தர்யாவின் கையை பிடித்து கொண்டு கூறிகிறார். இதனை அடுத்து தங்களின் வீட்டிற்கு லட்சுமி மற்றும் கண்ணம்மா வருகின்றனர்.

அப்பொழுது லட்சுமி, கண்ணம்மாவிடம் நீ தான் என் அம்மா என்ற உண்மையை சொல்லிருந்தா நான் இங்க சீக்கிரம் வந்துருப்பேன்ல. எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல. வெறுப்பா இருந்துச்சு என்று கூறுகிறார். மேலும் லட்சுமி, டாக்டர் அங்கிள் என்கிட்ட அடிக்கடி அப்பாவை பத்தியே கேட்டு இருந்தார். எல்லாருக்கும் அப்பா இருக்காங்க எனக்கு மட்டும் ஏன் இப்படி, நிஜமாவே எனக்கு அப்பா இருக்காரா? என தன் அப்பாவை பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார்.

மேலும் டாக்டர் அங்கிள் ஓ கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு கோவமாக நடந்துகிறார். இவ்வாறு அங்கு நடந்த ஒவ்வொன்றையும் கூறி அதற்கான பதிலை கூறுமாறு கேட்க பதில் சொல்ல முடியாமல் கண் கலங்கி தவிக்கும் கண்ணம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டு கட்டியணைத்து கொள்கிறார்.

இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் வேணு, பாரதி அடுத்து என்ன செய்யப்போகிறார் என பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் சௌந்தர்யா, கண்ணம்மா இரட்டை குழந்தைகள் விவகாரம் பற்றி எதுவும் கேட்கவில்லை. இதை அஞ்சலியின் சீமந்தம் அன்று கண்டிப்பாக என்னிடம் கேட்பார் என கூறுகிறார்.

இதையடுத்து கண்ணம்மா காய்கள் நறுக்கிய படி பாரதி கூறியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் கண்ணம்மா வீட்டிற்கு கண்ணம்மாவின் சித்தி மற்றும் அப்பா வருகின்றனர். முதலில் வீட்டிற்குள் வர மறுக்கும் பாக்கியா பிறகு சண்முகம்  சமாதானம் செய்த பிறகு வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் பார்த்த கண்ணம்மா சந்தோஷப்பட்டு அவர்களை உள்ளே கூப்பிடுகிறார். அதன் பின்னர் உள்ளே வரும் பாக்கியா , கண்ணம்மாவிடம் அனுசரணையாக பேசுகிறார். மேலும் அஞ்சலியின் வளைக்கப்புக்கு உன்னை அழைக்க வந்ததாக கூறுகின்றனர்.

இதற்கு கண்ணம்மா நான் எப்படி வருவது என கேட்கிறார். மேலும் பாக்கியா என்னை அசிங்கப்படுத்த தான் கண்ணம்மா வரமாட்டேன்னு சொல்கிறார் என கூற, அதற்கு கண்ணம்மா அப்படியெல்லாம் இல்லை நான் அஞ்சலிக்காக வரேன் என்று கூறுகிறார். இவ்வாறு இன்றைய கதை நிறைவுபெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here