கலகலப்பாக தொடங்கும் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி…!கலகமூட்டவரும் வெண்பா!!!

0

தமிழில் வெற்றி சீரியலாக வலம் வரும் நாடக தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய கதையாக, மகிழ்ச்சியாக அஞ்சலியின் வளைகாப்பு சொந்தம் அனைவரும் சூழ ஆரம்பமாகிறது. அதில் குடும்பம் ஒன்றாக இணைவது பிடிக்காத வெண்பா அவர்களை பிரிக்க மனதில் திட்டமிடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு வரும் கண்ணம்மா மற்றும் லட்சுமியை பார்த்து அதிர்ச்சியில் இருக்கின்றனர் சௌந்தர்யா மற்றும் பாரதி. இந்நிலையில் இன்றைய கதையில், அனைவரையும் பார்த்த சந்தோஷத்தில் லட்சுமி சௌந்தர்யாவிடமும், ஹேமா கண்ணம்மாவிடமும் ஓடிச் செல்கின்றனர்.

இருவரும் தத்தம் தங்களிடம் வந்த குழந்தைகளை கட்டி அனைத்துக் கொள்கின்றனர். அதன் பின்னர் ஹேமா மற்றும் கண்ணம்மா நடந்து வருகிறார். அதன் பின்னர் கண்ணம்மா சௌந்தரியாவை பார்த்தபடி உள்ளார். அதை பார்க்கும் சௌந்தர்யா, கண்ணம்மா தனக்கு பிறந்த இரட்டை குழந்தை பற்றி கேட்பாளோ என மனதில் பயத்தோடு இருக்கிறார்.

இந்நிலையில் கண்ணம்மா, அத்தை நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் எனக்கூறி கொண்டே பாரதி இருப்பதை பார்க்கிறார். அதன் பிறகு, பாரதி இருக்கும் போது இதை  நம்ம கேட்க வேண்டும் விழா முடிவதற்குள் எப்படியாவது கேட்டு விடுவோம் என மனதில் நினைக்கிறார். இதையடுத்து சௌந்தர்யா லட்சுமியிடம் தாத்தாவை கூப்பிட்டு வரேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.

அதன் பின்னர் சண்முகம், கண்ணம்மா மற்றும் லட்சுமியை பார்த்து சந்தோஷப்பட்டு லக்ஷ்மியை கொஞ்சுகிறார். அதன் பிறகு அகில் மற்றும் அஞ்சலி வந்து கண்ணம்மாவை உள்ளே அழைத்து செல்கிறார். அங்கு கண்ணம்மாவை பார்க்கும் பாக்கியா, சந்தோசப்பட்டு உள்ளே வர சொல்கிறார். இதையடுத்து சௌந்தர்யா பயத்துடன் வந்து வேணுவிடம் கண்ணம்மா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் வேணு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கண்ணம்மா, அந்த விஷயத்தை  கேட்கலாம் என நினைக்கிறார். அத்தை என அழைத்தபடி உள்ளே செல்லும் கண்ணம்மாவை பேச விடாமல் அஞ்சலியை கூப்பிட்டு வருவோம் என கூறிக்கொண்டு வெளியே அழைத்து செல்கிறார். இந்நிலையில் வெண்பா வருகிறார். வெண்பாவும் பாரதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா அவர்கள் இருவரும் இருப்பதை பார்க்கின்றனர். இந்நிலையில் வெண்பாவை பார்த்து கண்ணம்மாவும்,  கண்ணம்மாவை பார்த்து வெண்பாவும் கோவத்துடன் முறைத்து கொள்கின்றனர். இதனை அடுத்து  கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவை வெறுப்பேற்ற வெண்பாவின் அழகை புகழ்ந்து கொண்டிருக்கிறார் பாரதி.

அதன் பின்னர் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா, அஞ்சலி  ரூமுக்கு வருகின்றனர். அங்கு அஞ்சலியின் முகம் வாடி இருப்பதை பார்க்கும் சௌந்தர்யா என்னாச்சு என கேட்கிறார். அதற்கு அஞ்சலி நான் நன்றாக தான் இருக்கிறேன் என கூறுகிறார். அதன் பின்னர் கண்ணம்மாவுக்கு நகையை எடுத்து கொடுத்து போட்டுக் கொள்ளுமாறு கூறுகிறார்.

அதை மறுக்கிறார் கண்ணம்மா. அதன் பின்னர் அந்த நகையை சௌந்தர்யாவே அவரின் கழுத்தில் அணிந்து விடுகிறார். அதன் பிறகு அஞ்சலியை அழைத்து மேடைக்கு செல்கின்றனர். அவர்களை பார்க்கும் வெண்பா குடும்பம் ஒன்னு சேந்துருவங்களோ, இவங்கள சேரவிட கூடாது என மனதில் திட்டமிடுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here