அஞ்சலியின் வளைகாப்புக்கு வரும் கண்ணம்மா, லட்சுமி…!அதிர்ச்சியில் சௌந்தர்யா, பாரதி!!!!

0

பரபரப்பாக காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில், அஞ்சலியின் வளைகாப்புக்கு வரும் கண்ணம்மா மற்றும் லட்சுமியை பார்த்து ஷாக்கில் உள்ளனர் சௌந்தர்யா மற்றும் பாரதி.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் , அஞ்சலி வளைகாப்பிற்காக கண்ணம்மா மற்றும் பாரதி வரும் நிலையில் எப்படியாவது அந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என திட்டமிடுகிறார். இதையடுத்து இன்றைய கதையில், அகிலன் அஞ்சலியிடம்  சீமந்தத்திற்கு எந்த புடவை கட்ட போகிறாய் என கேட்டுக்கொண்டே புடவையை செலக்ட் செய்து கொடுக்கிறார்.

 

அதன் பிறகு தான் வாங்கிட்டு வந்த பொருட்களை கொண்டு வந்து அஞ்சலியிடம் சர்ப்ரைஸ் எனக்கூறி கொடுக்கிறார். அதன் பின்னர் அகில் வாங்கிட்டு வந்த நகைகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார் அஞ்சலி. மேலும் அகிலிடம், அஞ்சலி இது எல்லாம் வாடகை நகை தான என கிண்டலாக கேட்கிறார். அதன் பின்னர் அகில் அஞ்சலி ரூமை விட்டு வெளியே செல்கிறார்.

இந்நிலையில் அஞ்சலி இந்த சந்தோசம் எல்லாம் உங்களுக்காக மட்டும் தான், குழந்தை பிறந்ததற்கு அப்புறம் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என தன்னுடைய மனதில் நினைத்துக் கொள்கிறார். இதையடுத்து வளைகாப்பு வீட்டிற்கு வரும் பாரதி, யாரும் வரவில்லை போல அவங்க வரவைக்கும் கார்லேயே இருப்போம் என கூறிக்கொண்டு காரில் இருக்கிறார்.

அப்பொழுது வெண்பா தன்னுடைய புகைப்படங்களை பாரதிக்கு அனுப்புகிறார். அதை பார்த்த பாரதி வெண்பாவை தீட்டக்கொண்டே அவரின் புகைப்படம் சூப்பர் என மெசேஜ் செய்கிறார். அதை பார்க்கும் வெண்பா மகிழ்ச்சியாகி அங்க போய்  பாரதிக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறார்.

அதன் பின்னர், சௌந்தர்யா, வேணு மற்றும் ஹேமா அஞ்சலி வீட்டிற்கு வருகின்றனர். அங்கு வந்திருக்கும் பாரதியை பார்த்து ஓடி செல்கிறார் ஹேமா. அதன் பிறகு பாரதி, வேணு மற்றும் சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது வெண்பா பாரதிக்கு  போட்டோ மேல் போட்டோ அனுப்பி கொண்டிருக்கிறார். அதை சௌந்தர்யாவிடம் காட்டி அவர்களை கடுப்பேத்துகிறார் பாரதி.

அதை அடுத்து சௌந்தர்யா மற்றும் வேணு வீட்டிற்கு உள்ளே செல்கின்றனர். அவர்களை பாக்கியா மற்றும் சண்முகம் வரவேற்கின்றனர். அதன் பின்னர்  இரு குடும்பமும் வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து  அஞ்சலியின் அழகை ரசித்தபடி இருக்கும் அகிலிடம் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி  ஹேமா தன்னுடைய உயிர் இருப்பினும், அஞ்சலியின் குழந்தை தான் நம்ம  இரத்த வாரிசு எனவும் கூறுகிறார். அதற்கு அகில், ஹேமாவும் நம்ம  இரத்த வாரிசு தான் உனக்கும் கண்ணம்மா அண்ணிக்கும் பிறந்த குழந்தை தான் ஹேமா  என மனதில் நினைத்துக் கொள்கிறார்.

அதன் பின்னர் கண்ணம்மா லட்சுமியுடன் வளைகாப்பு வீட்டுக்கு வருகிறார். அதை பார்க்கும் சௌந்தர்யா அவள் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பற்றி கேட்டாள் என நினைத்து பயப்படுகிறார்.

அதனால் உள்ளே போக நினைக்கும் சௌந்தர்யாவிடம் ஹேமா, பாட்டி சமையல் அம்மா என கூற கண்ணம்மாவை பார்க்கும்  சௌந்தர்யா அதிர்ச்சியில் அப்படியே நிற்கிறார். அதன் பிறகு பாரதியை பார்த்து கண்ணம்மாவும், கண்ணம்மாவை பார்த்து பாரதியும் ஷாக்கில் இருக்கின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here