அஞ்சலி வளைகாப்புக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என திட்டமிடும் வெண்பா…!இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்!!!

0

தமிழில் டாப் சீரியல்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்று, அஞ்சலியின் வளைகாப்புக்கு, பாரதி, கண்ணம்மா இருவரும் செல்லும் நிலையில், வெண்பா வளைகாப்புக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில், அஞ்சலி வளைகாப்பிற்காக கண்ணம்மா அழைக்க அவரின் வீட்டிற்கு சண்முகம் மற்றும் பாக்கியா வருகின்றனர். இதையடுத்து முதலில் வர மறுக்கும் கண்ணம்மா பிறகு வளைகாப்புக்கு வர சம்மதிக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், அஞ்சலியின் சீமந்த விழாவுக்கு லட்சுமி மற்றும் கண்ணம்மா தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் லட்சுமி சீமந்தம் பற்றியும், சொந்தக்காரங்க பற்றியும் தொடர்ச்சியாக கேள்விகள் மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் லட்சுமியிடம் கோவப்படும் கண்ணம்மா, நா ஒரு அனாதை எனக்குன்னு யாரும் இல்லை, உனக்கு என் கூட இருக்க பிடிக்கலனா அந்த டாக்டர் வீட்டுக்கு போ என கடிந்து கொள்கிறார். அதன் பின்னர் லட்சுமி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து சௌந்தர்யாவிடம் ஹேமா லட்சுமி கேட்ட கேள்வியான சீமந்தம் பற்றி கேட்கிறார்.

இந்நிலையில் பாரதி மற்றும் புதிய அகிலன் மாடியில் இருந்து வருகின்றனர். அதன் பிறகு சீமந்ததிற்கு கிளம்புவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரதி நான் வரவில்லை என கூற அதற்கு குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. அதன் பின்னர் பாரதி நான் ஹாஸ்பிடல் போய்விட்டு ஒரு சின்ன வேலை இருக்கு அத  முடித்துவிட்டு சீமந்தத்திற்கு வருவதாக கூறுகிறார்.

இந்நிலையில் அஞ்சலி வீட்டில் சீமந்த வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பாக்யாவும், சண்முகமும் கண்ணம்மா வருவாரா? என்ற பதற்றத்துடன் உள்ளனர்.

அதன் பின்னர் வெண்பா அஞ்சலியின் சீமந்தத்திற்கு நம்மை அழைக்கவில்லை என நினைத்து கொண்டு  அஞ்சலிக்கு போன் செய்து இது பற்றி கேட்கிறார். மேலும் போனில் அஞ்சலி வெண்பாவை சமந்தத்திற்கு அழைக்கிறார். அதன் பின்னர் குதூகலமாக ரெடியாகுகிறார் வெண்பா.

அதன் பிறகு, வெண்பாவின் வீட்டு வேலைக்காரி மறுபடியும் மறுபடியும் அந்த வீட்டுக்கு போய் ஏன் அசிங்கபடணும் என் கேட்க, அதற்கு   கண்ணம்மா வராத இடத்திற்கு நம்ம  போகணும் என்று  கூறுகிறார். அதன் பின்னர் பட்டு புடவை உடுத்தி கிளம்புகிறார் வெண்பா.

இதையடுத்து சண்முகம், பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமண புகைப்படத்தை சுவற்றில் மாட்டுகிறார். அப்பொழுது அவரை பாக்கியா திட்டுகிறார். அதாவது அதை பார்த்த டாக்டர் மற்றும் கண்ணம்மா கோபப்படுவாங்க அதனால் இந்த சீமந்தத்திற்கு ஏதாவது பிரச்சனை வரும் எனக் கூறுகிறார். அதற்கு சண்முகம் இந்த போட்டோ பார்த்து அவங்க மனசு மாறும் என்று கூறுகிறார். இவ்வாறாக இன்றைய கதைக்களம் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here