பாரதி வெண்பா பற்றிய மிக பெரிய உண்மையை உடைத்த அஞ்சலி…!குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா!!!

0

பரபரப்பான திருப்பங்கள் உடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்று, பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்பதை அஞ்சலி அனைவர் முன்னிலையிலும் கூறுகிறார். அதை கேட்கும் கண்ணம்மா குழப்பத்தில் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு விழா மிகவும் விமர்சையாக தொடங்குகிறது. இந்நிலையில் இன்றைய கதையில், கண்ணம்மாவை பார்த்த படி பாரதி வெண்பாவிடம் மகிழ்ச்சியாகவும் மிக நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது இருவரும் கணவன் மற்றும் மனைவி பேசிக் கொள்வது போன்று தங்களின் வீட்டின் நிலை பற்றி பேசிக் கொள்கின்றனர். மேலும் வெண்பாவின் அழகையும் பாரதி வர்ணித்து கொண்டிருக்கிறார்.

இதை கேட்கும், பார்க்கும் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவின் குடும்பத்தினர் கோவத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர். இந்நிலையில் லட்சுமி மற்றும் ஹேமா தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அங்கு கையில் பந்துடன் வரும் அகில் அவர்களோடு இணைந்து விளையாடுகிறார். இந்நிலையில் அங்கு வரும் கண்ணம்மா, வெண்பா பற்றி யோசித்துக்கொண்டே கோபப்பட்டு வெளியே வருகிறார்.

அதன் பின்னர் ஹேமாவை பார்க்கும் கண்ணாம்மா, ஏன் ஹேமா பார்க்கும் லட்சுமி மாதிரி தோணுது, ஹேமா தான் தன்னுடைய இன்னொரு பெண்ணாக இருப்பாளோ, இந்த விவரம் பற்றி கண்டிப்பா அத்தைக்கு தெரியும் அதுனால தான் என்கிட்ட முகம் கொடுத்து பேசாம இருக்காங்களோ என மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அந்த நேரத்தில் அகிலை பார்க்க அங்கு வரும் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் மாட்டிக்கொள்கிறார்.

இந்நிலையில் கண்ணம்மா சௌந்தர்யாவை பார்த்து உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் சொல்கிறார். அதற்கு சௌந்தர்யா ஏதேதோ சொல்லி தழுவி செல்கிறார். அதன் பின்னர் அஞ்சலியின் வளைகாப்பு ஆரம்பமாகிறது. அப்பொழுது வேணு சௌந்தர்யாவிடம் கண்ணம்மாவுக்கு அப்படி ஏன் பயப்படுகிறாய் என கேட்கிறார். அப்பொழுது பாரதி மீண்டும் வெண்பாவுடன் போட்டோ எடுப்பது, சந்தோசமாக பேசுவது என அனைவரையும் வெறுப்பேற்றுகிறார். இதனால் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர்.

அதன் பின்னர் அஞ்சலிக்கு வளைகாப்பு நலங்கு தொடங்குகிறது.  அப்பொழுது அகில், இவள யாரு இங்க வர சொன்ன என கோவத்தில் சௌந்தர்யாவிடம் கூறிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஞ்சலி, வெண்பா இப்படி நடந்து கொள்வது தப்பு என தனது மனதில் நினைத்து கொள்கிறார். அப்பொழுது அங்கிருந்து கண்ணம்மா சென்றுவிடுகிறார்.

அவரை பின்தொடர்ந்து வரும் சண்முகம் கண்ணம்மாவை சமாதானம் செய்கிறார். இதையடுத்து சமாதானமான கண்ணம்மா அஞ்சலிக்கு ஏதாவது வாங்கி தருமாறு சண்முகத்திடம்  பணத்தை கொடுத்துவிட்டு  கண்ணம்மா உள்ளே செல்கிறார். அதன் பின்னர் முதலில் நலங்கு வைக்க சௌந்தர்யாவை பாக்கியா சொல்ல, அதற்கு சௌந்தர்யா பெரியவங்க யாராவது வைக்கட்டும் என கூறுகிறார். அதன் பின்னர் சௌந்தர்யா மற்றும் வேணு நலங்கு வைத்து அஞ்சலியை ஆசிர்வதிக்கின்றனர்.

அப்பொழுது குடும்பம் முழுவதும் இணைந்து அஞ்சலுக்கு பரிசு வழங்குகின்றனர் அப்பொழுது வெண்பாவும் அதில் தன்னை இணைந்து கொள்கிறார்.இந்நிலையில் சௌந்தர்யா பாரதியை அழைத்து நலங்கு வைக்க சொல்கிறார். அப்பொழுது வெண்பாவும் உடன் சேர்ந்து வருகிறார்.

இதனை விரும்பாத குடும்பத்தினர் கடுப்பில் இருக்க, அப்பொழுது அஞ்சலி தன் அம்மாவிடம் கல்யாணம் ஆகாதவங்க நலங்கு வைக்கலாமா? என கேட்கிறார். அதற்கு பாக்கியா இங்க யார் கல்யாணம் முடியாம இருக்காங்க என கேட்க அதற்கு அஞ்சலி அதன் இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என கூறுகிறார். அதை கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியில் இருக்கிறார். இவ்வாறு இன்றைய கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here