வித்தியாசமான கதை களத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 விரைவில் தொடக்கம்!!

0
வித்தியாசமான கதை களத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 விரைவில் தொடக்கம்!!
வித்தியாசமான கதை களத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 விரைவில் தொடக்கம்!!

பாரதி கண்ணம்மா சீரியலின் சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் லீக் ஆகி வருகிறது. அதற்கான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில், வெண்பாவிற்கு திருமணம் முடிந்து உள்ளது, இதையடுத்து ஹேமாவிற்கு உண்மையும் தெரிந்தையை அடுத்து, அவர் கண்ணம்மா வீட்டுக்கு சென்று உள்ளார். ஹேமாவின் பிரிவால் பாரதி மிகவும் வருத்தத்தில் உள்ளார். இதையடுத்து சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2 கான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில், டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் பாரதியை மீண்டும் வெண்பா, தன் வலையில் சிக்க வைத்து டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டில் fraud வேலை பாக்கிறார். இதனால் கண்ணம்மா மீது இருந்த சந்தேகம் பாரதிக்கு மேலும் அதிகரித்து, முழுமையாக கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கி ஊரை விட்டு போக சொல்கிறார். இதையடுத்து கண்ணம்மா ஊரை விட்டு கிளம்பி ஹேமா மற்றும் லட்சுமியோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது வெண்பாவின் சதி திட்டத்தால் லாரி இடித்து கார் ஆக்சிடென்ட் ஆகி விடுகிறது.

பிரபல இயக்குனரை மேடையில் அசிங்கப்படுத்திய மிஷ்கின்.., கலகத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

இதனால் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் பிரிந்து வேறொரு குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அதாவது லட்சுமி டாக்டர் ஆகவும் ஹேமா ஆட்டோ டிரைவர் ஆகவும் மாறிவிடுகின்றனர். அப்போது ஒரு நாள் காரில் லட்சுமியும், ஆட்டோவில் ஹேமாவும் வந்து கொண்டு இருக்கும் போது சின்ன ஆக்சிடென்ட் ஆகி லட்சுமி மயக்கமடைந்து விடுகிறார்.

இதையடுத்து ஹேமா தனது ஆட்டோவில் லட்சுமியை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் செல்கிறார். அப்போது இருவர் கையிலும் H.S என்று Tattoo இருக்கிறது. இப்படி தான் பாரதி கண்ணம்மா சீசன் 2 கதைகளம் நகர உள்ளது. இதையடுத்து கடைசியில் குடும்பம் ஒன்று சேருமா? என்பது தான் இந்த சீசன் 2 கதை என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here