DNA ரிப்போர்ட் உண்மையை உடைக்க ரீ என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்.., ஒரு வழியா சீரியலுக்கு முற்று புள்ளி வச்சாச்சு!!

0
DNA ரிப்போர்ட் உண்மையை உடைக்க ரீ என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்.., ஒரு வழியா சீரியலுக்கு முற்று புள்ளி வச்சாச்சு!!
DNA ரிப்போர்ட் உண்மையை உடைக்க ரீ என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்.., ஒரு வழியா சீரியலுக்கு முற்று புள்ளி வச்சாச்சு!!

பாரதி கண்ணம்மா சீரியலில் எப்போது DNA டெஸ்ட் ரிசல்ட் வரும் என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி இந்த சீரியலில் 2 வருடங்களுக்கு பிறகு செல்வராஜ் என்ற கேரக்டர் இப்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. சில வருடங்களுக்கு முன்பு பாரதி ஹாஸ்பிடலில் வார்டு பாயாக வேலை பார்த்தவர் தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா மற்றும் பாரதி பிரிவதற்கு இவர் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதாவது வெண்பாவின் பேச்சை கொண்டு பாரதியின் DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பாரதி அவரை ஹாஸ்பிடலுக்கு வர சொல்லி ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராஜ் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் இவர் வழியாக பாரதிக்கு உண்மை தெரிய வரவும் வாய்ப்புள்ளது.அதாவது பாரதியின் நல்ல குணத்தை பார்க்கும் செல்வராஜ் மனம் திருந்தி அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுவாராம். அதுமட்டுமல்லாமல் வெண்பா தான் இதை செய்ய சொல்லியதாகவும் கூறிவிடுவாராம். இதை கேட்ட பாரதி அதிர்ச்சியில் இத்தன வருஷம் தப்பு பண்ணிட்டனே என அழுது கண்ணம்மா விடம் மன்னிப்பு கேட்பாராம். இனி வரும் எபிசோடுகளில் இது போன்ற காட்சிகள் தான் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here