காதலை மறைக்கும் கண்ணம்மா., சிக்கிக் கொண்ட சம்பவம்., பரபரப்பான காட்சிகளுடன் பாரதி கண்ணம்மா 2 promo!!

0

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா 2 சீரியல். இதில் பாரதிக்கு எப்படியாவது வெண்பாவை திருமணம் செய்து வைத்து விட வேண்டும், மேலும் தற்கு தடையாக இருக்கும் சௌந்தர்யாவை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதற்காக ராதா போட்ட சூழ்ச்சியில் வெண்பா சிக்கி கொண்டார்.

மேலும் அக்காவின் திருமண செலவிற்காக கோயிலுக்கு குதிரை செய்ய சென்ற கண்ணம்மாவும் அந்த வேலையை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பி விட்டார். இந்நிலையில் இந்த சீரியலுக்கான நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரதி காதலுக்கு no சொன்ன கண்ணம்மா அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக தேடுகிறார்.இதை பார்த்து கொண்டிருந்த அவரது தோழி மது கண்ணம்மா மனத்தில் பாரதி இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் கண்ணம்மாவிடம் வந்த மது பள்ளிக்கு பாரதி வந்திருப்பதாக பொய் சொல்கிறர். இதை கேட்டு கண்ணம்மாவும் ஓடி சென்று அவரை தேடுகிறார். ஆனால் அங்கு அவர் இல்லை. மேலும் எதற்காக பாரதி வந்திருப்பதாக என்னிடம் கூறினாய் என மதுவிடம் கண்ணம்மா கேட்க, அந்த நேரத்தில் உண்மையாகாவே பாரதி அங்கு வருகிறார். பிறகு கண்ணம்மா என கூப்பிடுகிறார், இதை கேட்டு இருவரும் ஷாக்காகி நிற்கின்றனர். இப்படியான காட்சிகளுடன் இந்த ப்ரோமோ காட்சிகள் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here