வெண்பாவின் செயலால் முடிவில்லா தொடர் கதையாகும் பாரதி கண்ணம்மா.., எல்லாம் மனச தேத்திக்கோங்க பா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வெண்பா செய்யப் போகும் ஒரு காரியத்தால் இந்த தொடர் ஒரு முடிவில்லாத தொடர்கதையாக மாறப்போகிறது.

பாரதி கண்ணம்மா அப்டேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடர் ஹாஸ்பிடல் ஹைஜாக் காட்சிகளை வைத்து கடந்த ஒரு வாரத்தை ஓட்டிவிட்டது. அந்த இக்கட்டான சூழலில் பாரதியும் கண்ணம்மாவும், கொண்டிருந்த நெருக்கத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக இனி இவர்கள் சேர்ந்து விடுவார்கள், சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என மனக்கோட்டை காட்டினர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால் அதில் மண்ணள்ளி போடும் விதமாக, வெண்பா ஒரு மட்டமான வேலையை பார்க்கப் போகிறார். ரோஹித்துடன் கொண்ட தவறான உறவினால் கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பணத்தை கொடுத்து ரோகித்தை சரி கட்டி விட்டு குழந்தைக்கு, அப்பா பாரதி தான் என தன் நாடகத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

ஊத்தி மூட தயாரான விஜய் டிவியின் பிரபல சீரியல்.., இதெக்கெல்லாம் காரணம் அந்த ஒரு விஷயம் தான்!!

பாரதியும் இதை முட்டாள்தனமாக நம்பி, வெண்பாவிடம் வசமாக சிக்க போகிறார். இப்படி முடிவில்லா தொடர் கதையாக மாறப்போகும், பாரதி கண்ணம்மா தொடரை இன்னும் தொடர்ந்து பார்க்க ரசிகர்கள் தங்கள் மனதை தேற்றி ஆறுதல் படுத்தி வருகின்றனர். நல்ல நோட் பண்ணிக்கோங்க,. இப்போதைக்கு இந்த சீரியல் முடிய வாய்ப்பே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here