தனது அப்பாவையே ஓவர்டேக் செய்த பாரதி கண்ணம்மா குழந்தை நட்சத்திரம் – குவியும் ரசிகர் பட்டாளம்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் குழந்தையாக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் ரக்சா தனது அசாத்திய நடிப்பால் தனது குடும்ப உறுப்பினர்களையே ஓவர்டேக் செய்துள்ளார்.

டப் கொடுக்கும் குழந்தை நட்சத்திரம்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இதில் கண்ணம்மாவின் குழந்தையாக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் ரக்சா.  இவர் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் ஷாமின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  ரக்சா சீரியலுக்கு வர காரணம் இவரின் அக்கா நிவாஸினி என்பது பலரும் அறியாத உண்மை.

இவர்தான், ரக்சாவை முதன் முதலாக ரெமோ என்ற  படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தவர்.  தனது இளம் வயதில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இந்த குழந்தை நட்சத்திரம் தனது அப்பாவையும்,  அக்காவையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடித்து வருகிறது என்பதே உண்மை. சொல்ல போனால் இவர்களின் குடும்பத்திலேயே இவருக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் தற்போது அதிகமாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here