ஒரே சுற்றில் ரசிகர்களை அலைபாய வைத்த கண்ணம்மா… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!

0
ஒரே சுற்றில் ரசிகர்களை அலைபாய வைத்த கண்ணம்மா... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!
ஒரே சுற்றில் ரசிகர்களை அலைபாய வைத்த கண்ணம்மா... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதையின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

பல்வேறு திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களே. இருப்பினும் இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய கதைக்களமாக, தன்னுடைய இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான் ஹேமா என்ற உண்மையை சௌந்தர்யா மூலம் அறிய விரும்புகிறார் கண்ணம்மா.

ஒரே சுற்றில் ரசிகர்களை அலைபாய வைத்த கண்ணம்மா... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!
ஒரே சுற்றில் ரசிகர்களை அலைபாய வைத்த கண்ணம்மா… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!

மேலும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தான் பெற்ற குழந்தைகள் தான் என்ற உண்மையை பாரதி அறிவாரா? அல்லது மீண்டும் வெண்பாவின் சூழ்ச்சியில் சிக்குவாரா ?என நொடிக்கு நொடி பரபரப்புடன் போய் கொண்டிருக்கிறது சீரியல். இந்த சீரியலின் கதை நாயகி கண்ணம்மா என்ற ரோஷினி ஹரிப்பிரியன் ஷார்ட் பிலிம்கள் மூலம் பிரபலமானவர். மேலும் ஹீரோயின்கள் என்றாலே அதிக கலர், செதுக்கி வைத்த உடல் அமைப்பு என்று இருந்த நிலையை மாற்றியமைத்தவர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

அதாவது கருப்பு நிறம் கொண்டிருந்தாலும் திறமை மட்டும் இருந்தால் போதும் என நிரூபித்து தனக்கென ஒரு ரசிகர்கூட்டத்தை சேர்த்தார். இந்நிலையில் அந்த ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சுடிதாரை அங்கும் இங்கும் சுற்றி ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களை அலைமோத வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here