வெண்பாவை கல்லால் அடித்த ஹேமா.., பழிதீர்க்க இப்படியா செய்வது.., வெளியாகிய ஷாக் ப்ரோமோ??

0
வெண்பாவை கல்லால் அடித்த ஹேமா.., பழிதீர்க்க இப்படியா செய்வது.., வெளியாகிய ஷாக் ப்ரோமோ??
வெண்பாவை கல்லால் அடித்த ஹேமா.., பழிதீர்க்க இப்படியா செய்வது.., வெளியாகிய ஷாக் ப்ரோமோ??

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை கடத்தி மீண்டும் வெண்பா பல சூழ்ச்சிகளை செய்து வருவதற்கான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் பல சுவாரஸ்யமான ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்ஏ டெஸ்ட் கூடிய விரைவில் வெளியாகிவிடும் என்று தான் தெரிகிறது. இப்படி இருக்கையில் இப்போது வெளியான ப்ரோமோவில் வெண்பா பாரதியை அடைய பல சூழ்ச்சிகளை செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பாரதி எப்படியாவது DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை தெரிந்து கொள்ள வேண்டும் என யோசிக்கிறார். அதற்காக அவர் டெல்லி லேப்புக்கு கிளம்பி செல்கிறார். மறுபுறம் ஹேமா தனது அப்பா யார் என்பதை கண்டுபிடிக்க தெருத்தெருவாய் தேடி அழைக்கிறார். அப்போது பார்த்து வெண்பா அந்த வழியாக வர ஹேமாவிடம் இங்கே என்ன செய்ற என கேட்கிறார். இதற்கு ஹேமா எங்க அப்பாவ கண்டுபிடிக்கணும் என சொல்கிறார்.

ராதிகாவை படாதபாடு படுத்தும் ராமமூர்த்தி.., இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ!!

ஆனா வெண்பா உங்க அப்பா யாருன்னு உங்க அம்மாவுக்கே தெரியாது, இது நீ கண்டுபிடிக்க போறியா என கிண்டலடிக்கிறார். இதனால் கடுப்பான ஹேமா கீழே இருந்த கல்லை எடுத்து வெண்பா தலையில் ஓங்கி அடிக்கிறார். அடி வாங்குன ஆத்திரத்தில் வெண்பா அடியாட்களை வைத்து ஹேமாவை கடத்திச் செல்கிறார். ஹேமா காணாமல் போனதை அறிந்த சௌந்தர்யா, கண்ணம்மா அவரை தேடி அழைக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதன்  பிறகு அடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here