பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் வரும் சமயத்தில் சொதப்பும் டைரக்டர்.., கடைசி நேரத்துல இந்த ட்ராக் தேவையா??

0
பாரதி கண்ணம்மா சீசன் 2 கதை இதுதான்.., அப்பட்டமாக உளறிய அருண்.., வைரல் வீடியோ!!
பாரதி கண்ணம்மா சீசன் 2 கதை இதுதான்.., அப்பட்டமாக உளறிய அருண்.., வைரல் வீடியோ!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா தன் அப்பாவை தேடி போய் தேவையில்லாமல் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட நிலையில் கண்ணம்மா எப்படியோ தேடி கண்டுபிடிக்கிறார். பிறகு ஹேமாவுக்கு தலையில் அடிபட்டதால் அவரை ஹாஸ்பிடல் அட்மிட் செய்து பார்த்துக் கொள்கின்றனர். மறுபுறம் பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட்டை தெரிந்து கொண்டு கதறி அழுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது ஹேமாவால் புது பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டுள்ள ஹேமா கண் முழித்து வெளியே வருகிறார். அப்போது கண்ணம்மா மருந்து வாங்க செல்கிறார். சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் அசந்து தூங்கி விட்டனர். இந்த நேரத்தில் ஹேமா லிப்ட் வழியாக மொட்டை மாடிக்கு சென்று என் அப்பா யார் என்று சொல்லவில்லை என்றால் நான் இங்கு இருந்து குதித்து செத்து விடுவேன் என மிரட்டுகிறார். கண்ணம்மா மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

தனலட்சுமிக்கு இப்படி ஒரு காரியத்தை செய்த ஏடிகே.., புகைப்படத்துடன் நிரூபணமான உண்மை!!

மற்றவர்களும் ஹேமாவை கீழே இறக்க எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்கு சற்றும் பிடி கொடுக்காமல் என் அப்பா யாரு என்று சொல்ல வேண்டும் என பிரச்சனை செய்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் கண்ணம்மா பாரதி தான் உன் அப்பா என்ற உண்மையை சொல்லிவிடுவார் என்று தான் தெரிகிறது. மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் கதை முடியும் நேரத்தில் டைரக்டர் ஏன் இது போன்ற ட்விஸ்டுகளை வைத்து சொதப்புகிறார் என கமெண்டு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here