விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர், குறித்த லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளியான ப்ரோமோ:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீபகாலமாக கிராமத்து கதைக்களத்தை வைத்து நகர்ந்து வரும் இந்த சீரியலில், லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தன்னை அசிங்கப்படுத்திய கண்ணம்மாவை, களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பாண்டி, அவருடன் தவறான உறவில் இருந்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார். இந்த விஷயம், ஊர் முழுவதும் பரவியதால் மொத்த ஊரும் கண்ணம்மாவுக்கு எதிராக திரும்புகிறது.
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்., தெரிஞ்சே உங்க தலையில் மண்ணள்ளி போட்டுக்க போறீங்களா?
ஏற்கனவே, பாரதி, கண்ணம்மாவை இது போன்ற ஒரு விஷயத்தில் சந்தேகித்ததால் தான், மொத்த பிரச்சனையும் உருவானது. தற்போது மீண்டும் கண்ணம்மா மீது, இப்படி ஒரு பழி விழுந்துள்ளதால் இனி அவர் இதை எவ்வாறு எதிர்கொள்வார் என கேள்வி எழுந்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா தொடர் சுத்தி சுத்தி மறுபடியும் அந்த இடத்துக்கு வந்துவிட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.