டிஎன்ஏ ரிப்போர்ட்டை மாற்றும் வெண்பா? பகடை காயாகும் ஹேமா! பரபரப்பில் பாரதி கண்ணம்மா!!

0
டிஎன்ஏ ரிப்போர்ட்டை மாற்றும் வெண்பா? பகடை காயாகும் ஹேமா! பரபரப்பில் பாரதி கண்ணம்மா!!
டிஎன்ஏ ரிப்போர்ட்டை மாற்றும் வெண்பா? பகடை காயாகும் ஹேமா! பரபரப்பில் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில், டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் குறித்த காட்சிகள் உச்சகட்ட பரபரப்புடன், இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

பாரதி கண்ணம்மா :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர், கடந்த சில நாட்களாக எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. டீன் ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை, இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் வாங்கிவிட வேண்டும் என்ற உறுதியுடன் பாரதி இருக்கிறார். இதனால் ரிப்போர்ட்டை வாங்க நேரடியாக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இதை சௌந்தர்யாவிடம் சொல்லாமல் மறைமுகமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மறுபக்கம் வெண்பா, ஹேமாவை தேவையில்லாமல் வம்பு இழுத்து எரிச்சல் அடைய செய்கிறார். இதனால் பொறுமை இழந்த ஹேமா கல்லை எடுத்து, வெண்பாவின் மண்டையை பதம் பார்க்கிறார். கோபப்பட்ட வெண்பா, ஆட்களை ஏவி விட்டு ஹேமாவை கடத்த சொல்கிறார். ஹேமா காணாமல் போன செய்தி அறிந்து கண்ணம்மா உட்பட குடும்பத்தினர் அனைவரும் துடித்துப் போகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கும்போது, ஹேமாவை பகடைக்காய் ஆக்கி, மீண்டும் பாரதியை தன் வலைக்குள் இழுக்க வெண்பா திட்டம் போடலாம், என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் எப்படியாவது பிளான் செய்து, அவர் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டையும் மாற்றி விடுவார் என சொல்லப்படுகிறது. இது போன்ற எதிர்பார்ப்புகளுடன் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here