அஞ்சலி செய்த காரியத்திற்கு நன்றி சொல்லும் அகில், சௌந்தர்யா…!இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் !!!

0

தமிழ் சீரியல்களில் தொடர்ந்து டாப்பில் இருக்கும் ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்று, அஞ்சலி வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை உடைத்தால் அவருக்கு, அகில் மற்றும் சௌந்தர்யா நன்றி சொல்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில், ஹேமா தான் பெற்ற குழந்தை தான் என சந்தேகிக்கும் கண்ணம்மா அது தொடர்பாக பல கேள்விகளை சௌந்தர்யா மற்றும் வேணுவிடம் கேட்கிறார். இதற்கு என பதில் சொல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர் சௌந்தர்யா மற்றும் வேணு. இந்நிலையில் இன்றைய கதையில், என்ன ஒரு குழந்தை கடத்தல் காரியா? மாதிரி சொல்ற என கேட்கிறார்  சௌந்தர்யா.

அதற்கு கண்ணம்மா நான் கேக்குறது வேற நீங்க சொல்றது வேற என ஆவேசமாக கூறுகிறார். இவ்வாறு தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று ஹேமா தான் என கூறிக் கொண்டே இருக்கிறார். மேலும் ஹேமா பிறந்த நாளும்,லக்ஷ்மியின் பிறந்த நாளும் ஒரே தேதியில் வருவது எப்படி என கேட்கிறார் கண்ணம்மா.

அதற்கு சௌந்தர்யா ஹேமா தத்து எடுத்த நேரத்தில் தான் லட்சுமி பிறந்தால், எனவே தான் அதே தேதி மற்றும் நேரத்தை ஹேமாவுக்கு கொடுத்ததாக கூறுகிறார். அந்த வேளையில் அங்கு வரும் பாரதி சௌந்தர்யாவை யாரோ ஒருவர் கூப்பிடுவதாக சொல்லி அழைத்து செல்கிறார். எனினும் பல்வேறு குழப்பங்கள் உடன் இருக்கிறார் கண்ணம்மா.

இந்நிலையில் கோபத்துடன் கிளம்பும் வெண்பாவை பின்தொடர்ந்து வரும் அஞ்சலி அவரை சமாதானம் செய்து சாப்பிட சொல்கிறார். அதன் பின்னர் வரும் பாரதியும் அவரை சமாளிக்கிறார். அதன் பின் சமாதானமாகும் வெண்பா  வீட்ற்குள் செல்கிறார். இதனையடுத்து பாக்கியா மற்றும் அஞ்சலி விழாவை பற்றி மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் பாக்கியா வெண்பா மற்றும் பாரதியின் கல்யாணம் பற்றியும், அவளின் ஆசையும், 8 வருடத்திற்கு முன்பு நடத்தையும் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு அகில் மற்றும் சண்முகம் வருகின்றனர். பின்னர் அஞ்சலி செய்த காரியத்திற்கு வாழ்த்துக்கள் கூறுகிறார் அகில். அதே போல் அடுத்து வரும் சௌந்தர்யாவும் அஞ்சல் செய்த செயலுக்கு மனமுருகி நன்றி கூறுகிறார்.

அதன் பின்பு பாரதி லட்சுமியையும், கண்ணம்மா ஹேமாவையும் அழைத்து கொண்டு சாப்பிட வருகின்றனர். எதிர்பாராத விதமாக பாரதி மற்றும் கண்ணம்மா பக்கத்தில் பக்கத்தில் அமர்கின்றனர். அதை பார்த்து சந்தோஷப்பட்டு பேசிக்கொண்டு இருக்கின்றனர் அஞ்சலி மற்றும் சௌந்தர்யா.

அதன் பின்னர் பாரதி மற்றும் கண்ணம்மா பார்த்துக் கொள்கின்றனர். இதனால் கோபத்தில் எழுந்து இடம் மாற நினைக்கும் பாரதியை, அஞ்சலி, அகில் மற்றும் சௌந்தர்யா திட்டம் திட்டி கண்ணம்மா பக்கத்திலேயே அமர வைக்கின்றனர். இத்துடன் இன்றைய கதை முடிவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here