தனக்கு எந்த குறையும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் பாரதி – சூடு பிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

0

பாரதிக்கு எப்போது வெண்பாவின் உண்மை முகம் தெரியவரும் என பலரும் எதிர்பார்த்த சமயத்தில் வெண்பாவின் சித்தப்பா பாரதிக்கு கால் செய்து அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்துள்ளார். இப்போது தான் பாரதி கண்ணம்மா தொடர் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் இணைய போகிறார்கள் என பலரும் எதிர் பார்த்த சமயத்தில் அப்படியே நிலைமை தலைகீழானது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக மயக்கத்தில் இருந்த வெண்பாவின் சித்தப்பா பாரதிக்கு கால் செய்து உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

ஏற்கனவே பாரதியிடம் எப்படியாவது உண்மையை கூறிவிட வேண்டும் என அவர் முயற்சி செய்யும் போது தான் வெண்பா மயக்கமருந்து கொடுத்து தொடர்ந்து மயக்க நிலையிலே வைத்திருந்தார். தற்போது மயக்கத்தில் இருந்து தெளிந்து வெண்பாவின் போனில் இருந்தே பாரதிக்கு கால் செய்து வெண்பா தான் உங்கள் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தார். உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதை தெரிந்த பின்பு பாரதியின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here