விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே.. ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து பாரதி கண்ணம்மா அஞ்சலி!!!

0

பல வித ட்விஸ்ட்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வீட்டி என்ற கண்மணி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் மணக்கோலத்தில் உள்ள ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

டிக் டாக் என்ற பொழுதுபோக்கு செயலி மூலம் சினிமாவுக்கு வந்தவர் ஸ்வீட்டி என்ற கண்மணி. இவரின் டிக் டாக் வீடியோக்களை சீரியல் ஆடிசனுக்கு அவரின் தோழி அனுப்பி வைக்க அந்த மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா என்ற சீரியல். இந்த சீரியலில் முதலில் தான் அழகு என்ற கவுரவத்தில், திமிராக யாரையும் மதிக்காத, கதையின் நாயகி கண்ணம்மாவை வெறுக்கும் அவரின் தங்கை அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் கதையின்  நாயகன்  பாரதியின் தம்பி அகிலன் அஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருப்பினும் அதன் பிறகு கண்ணம்மாவை வெறுத்து அவருக்கு எதிராக பல சதி செயல்களை செய்து வந்தார். இந்நிலையில் தற்போதைய கதையில் மனம் திருந்தி அகிலின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு, எப்படியாவது நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர் எபிசோடு – மாறன் பெயரில் சொத்து மாறப்போவதை உறுதி செய்த வக்கீல்!!

இவ்வாறு அந்த சீரியலில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஸ்வீட்டி என்ற கண்மணி. இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் மணப்பெண் கோலத்தில் உள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here