கண்ணம்மாவை முழுதாக ஒழித்து கட்ட மாஸ்டர் பிளான் போடும் பாரதி.. கதறி அழும் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மாவில் பாரதி கண்ணம்மாவின் சித்தியான பாக்கியாவை வைத்து கண்ணம்மாவை விவாகரத்துக்கு ஒப்பு கொள்ள வைக்க தெளிவாக காய்களை நகர்த்துகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோடில், பாரதி பாக்கியாவிடம் கண்ணம்மாவை விவாகரத்திற்கு நீங்கள்தான் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் இவ்வாறு செய்தால் கண்ணம்மாவிற்கு 5 கோடியும் உங்களுக்கு ஒரு கோடியும் தருவதாக சொல்கிறார்.
முதலில் ஒத்துக்கொள்ளாத பாக்கியம் பின்னர் பணம் தருவதாகச் சொன்னதும் இதற்கு ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் வெண்பாதான் காரணம் என்று உணர்ந்து சௌந்தர்யா வெண்பா வீட்டிற்கு சென்று வெண்பாவை கிழி கிழி என்ன கிழிக்கிறார்.
ஆனால் வெண்பாவோ சௌந்தர்யாவிடமே கண்ணம்மாவை பற்றி தவறாக பேச வெண்பாவை இரண்டு அறை கன்னத்திலேயே விடுகிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் இரவு பாரதி விவாகரத்து தர போவதற்காக அனைவருக்கும் ஸ்வீட் தருகிறார்.
ஆனால் கடைசி வரைக்கும் பாரதி வாயிலிருந்து விவாகரத்து என்ற வார்த்தை வரவில்லை. இதனால் சௌந்தர்யா என்னவாக இருக்கும் என குழம்புகிறார். கண்ணம்மாவிற்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என கடவுளிடம் கதறி அழுது வேண்டுகிறார்.
மறுநாள் காலை கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சௌந்தர்யாவும் லட்சுமியும் வீட்டுக்கு வருகின்றனர். இவர்களைப் பார்த்ததும் ஷாக் ஆகிறார் கண்ணம்மா. இத்தோடு இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here