கண்ணம்மா தூங்காமல் அழுது புலம்புவதை பாரதியிடம் கூறும் லட்சுமி.. மனம் மாறுவாரா?

0

பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா விவாகரத்து தர வேண்டியதை நினைத்து மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். வெண்பாவும் விவாகரத்து தந்தால் தான் உன் குழந்தை உன்னிடம் சேரும் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில், கண்ணம்மா தூங்காமல் இருப்பதைப் பார்த்து லட்சுமி கவலை அடைகிறார். அந்த நேரம் பார்த்து வெண்பா நாளை விவாகரத்திற்கு வக்கீல் ஆபீஸ் வந்துவிடு என்று ஞாபகப்படுத்துகிறார்.

ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் லட்சுமிக்கு உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. அதனால் ஆட்டோகாரர் குமார் லக்ஷ்மியை கூட்டிட்டு பாரதி ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். மறுபுறம் வெண்பா பாரதி வீட்டில் இருக்கும் சமயம் வேண்டுமென்றே போன் செய்து பேசுகிறார் இது வேணு சௌந்தர்யா அஞ்சலி அகிலன் இவர்கள் யாருக்குமே பிடிக்கவே இல்லை.

 

அதன் பின்னர் கண்ணம்மாவின் சித்தியை பார்த்து பாரதி ஏதோ பேச ஹாஸ்பிடலுக்கு வரவழைக்கிறார். அந்த நேரம் பார்த்து லக்ஷ்மியை குமார் கூட்டிட்டு வருகிறார். இதனால் பாரதி, கண்ணம்மா சித்தியை மறைந்து இருக்கும்படி சொல்லிவிட்டு லட்சுமி பரிசோதனை செய்கிறார்்.

ஆனால் லட்சுமியோ கண்ணம்மாவை நினைத்தே புலம்பிக் கொண்டிருக்கிறார். பின்னர் அவர்கள் சென்றபின் கண்ணம்மாவின் சித்தியை மீண்டும் அழைத்து பாரதி, கண்ணம்மாவிற்கு விவாகரத்து தரப்போவதாக சொல்கிறார் இதனால் அவரது சித்தி ஷாக் ஆகிறார். அதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here