உன்ன நம்ப வச்சு யாரோ ஏமாத்துறாங்க.. ஹேமா தான் உன் இன்னொரு குழந்தை – கண்ணம்மாவிடம் பரம ரகசியத்தை சொன்ன சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மாவில், பாரதியை விவாகரத்து செய்ய கண்ணம்மா முடிவெடுக்கும் போது சௌந்தர்யா வருகிறார். அவர் கண்ணம்மாவை தடுப்பாரா? என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் தற்போது இத்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் பொழுது சௌந்தர்யாவும் லட்சுமியும் வருகின்றனர். இதை பார்த்த கண்ணம்மா ஷாக் ஆகிறார். பின்னர் லட்சுமி அங்கிருந்து சென்ற பின் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் பேச ஆரம்பிக்க ஆனால் கண்ணம்மா சௌந்தர்யாவை மேடம் என அழைக்கிறார்.

   

இது சௌந்தர்யாவுக்கு கோபத்தை தூண்டுகிறது. பின்னர் விவாகரத்து பாத்திரத்தை சௌந்தர்யா பார்த்துவிட, இந்த பாத்திரத்தை உன்னிடம் கொடுத்ததது பாரதி தான என கேட்டு பாரதிக்கு கால் செய்யும் பொழுது தடுக்கும் கண்ணம்மா அது பாரதி இல்லை என தடுக்கிறார்.

இருவருக்கும் இடையேயான சண்டை பெரிதாகிறது. இறுதியாக கண்ணம்மா விவாகரத்து செய்தால் தான் தன் இரண்டாம் குழந்தை தனக்கு கிடைக்கும் என கூறி அழுகிறார். மேலும் சௌந்தர்யா துருவி துருவி கேள்வி கேட்க தன் குழந்தை பிச்சை எடுப்பதாக சொல்கிறார்.

இதை கேட்கும் சௌந்தர்யா அதிர்ச்சி ஆகி, விவாகரத்து பத்திரத்தை கிழித்தே போட்டு விடுகிறார். மேலும் நீ தேடும் குழந்தை அங்கு இல்லை என சொல்ல கண்ணம்மா குழம்புகிறார். உன்னை யாரோ ஏமாத்துறாங்க, உன் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாம நல்லா தான் இருக்க என சொல்கிறார் சௌந்தர்யா.

இதை தொடர்ந்து கண்ணம்மா விடாமல் கேள்வி கேட்க கடைசியாக ஹேமா தான் நீ பெத்த பொண்ணு என சௌந்தர்யா சொல்ல கண்ணம்மா கதறி அழுகிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here