கண்ணம்மாவிற்கு விவாகரத்து தர முடிவெடுக்கும் பாரதி.. விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா தன் இரண்டாவது குழந்தையை கண்டுபிடிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். மறுபுறம் கண்ணம்மாவிற்கு விவாகரத்து தர பாரதி முடிவெடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவுடன் நம்ம சேர்ந்தே வாழல. அப்புறம் எதுக்கு நம்ம விவாகரத்து பண்ணாம இருக்கோம் என்று யோசித்து அவருக்கு விவாகரத்து தர முடிவெடுக்கிறார் பாரதி.

அதை தொடர்ந்து வேணும்வும் சௌந்தர்யாவும் பாரதியின் அடிமனதில் கண்ணம்மாவின் மீது பரிவு இருப்பதால் தான் பாரதி பிரசவம் பார்த்ததாக பேசிக்கொண்டிருக்கின்றனர். மேலும் இருவரும் சேரும் காலம் சீக்கிரம் வந்துவிடும் என்று வேணு சொல்ல அது சௌந்தர்யாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் வெண்பா விவாகரத்து பத்திரத்தை நீட்டி கையெழுத்து போடும்படி சொல்லிவிட்டு செல்கிறார். ஏற்கனவே குழப்பத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு இது மேலும் குழப்பத்தை உண்டு செய்கிறது. பின்னர் சௌந்தர்யா வீட்டில் பாரதி வந்து, ஏன் இரட்டை குழந்தை விஷயத்தை தன்னிடம் சொல்லவில்லை என்று சண்டை போடுகிறார்.

மேலும் இதுக்கு ஒரு முடிவு எடுத்துள்ளதாக விவகாரத்து விஷயத்தை மறைமுகமாக சொல்லிட்டு சென்று விடுகிறார். அவர் எதை குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் வேணும்வும் சௌந்தர்யாவும் குழம்புகின்றனர்.

அதே சமயம் கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவின் முன் தோன்றி இந்த வயசுல உனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியல என்று அறிவுரை சொல்கிறது. அதற்கு கண்ணம்மா எனக்கு என் பொண்ணு வேணும் என்று சொல்ல, அப்போ உன் பொண்ணு உனக்கு கெடச்சுட்டா விவாகரத்து தேவ இல்ல என மனசாட்சி சூசகமாக சொல்ல கண்ணம்மா யோசிக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here