பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது லட்சுமிக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதால் தன் அப்பா அம்மாவை சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தற்போது பள்ளியில் இருந்து பெற்றோர்களுடன் குழந்தைகளை டூருக்கு அழைத்து செல்கின்றனர். லட்சுமி தன் அப்பா அம்மாவை பக்கத்தில் உட்கார வைக்கவேண்டும் என்று கண்ணம்மாவை பாரதியின் அருகில் உட்கார சொல்கிறார்.
ஆனால் எதிர்பாராத சமயம் கண்ணம்மா பாரதியின் மீது விழுந்து விடுகிறார். பின்னர் கண்ணம்மா லட்சுமியிடம் ‘ஏன் பாரதியை டாக்டர் அப்பா என்று கூப்புடுகிறாய்’ என்று கேக்க ‘உன்னை ஹேமா சமையல் அம்மானு கூப்பிடுற மாதிரி நான் டாக்டர் அப்பான்னு கூப்பிடுறேன், என்று தைரியமாக சொல்கிறார். மேலும் பள்ளியில் குழந்தைகளில் விவரங்களை ஒரு ஃபார்ம்மில் எழுத சொல்கிறார்கள்.
அப்பொழுது லட்சுமி அப்பாவின் பெயர் பாரதி என்று எழுதுகிறார். இதை பார்த்ததும் கண்ணம்மாவிற்கு தூக்கி வாரி போடுகிறது. இதையும் ஏன் என்று கண்ணம்மா கேக்க, ‘நீதான் அப்பா பெயர் பாரதி என்று ஒரு தடவை சொன்ன.. அதான் எழுதுனேன்’ என்று லட்சுமி சொல்கிறார். நடப்பதெல்லாம் பார்த்து கண்ணம்மா லட்சுமி அனைத்து உண்மைகளையும் அறிந்து கொண்டாளோ என்று பீதியில் உரைக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்